
இதய அறைக்குள்
புதைந்து கிடந்த
என் சந்தோசங்களை
மீட்டுக்கொண்டது
உன் முத்தங்கள்.
என்இதழ் தந்த முத்தங்களும்
என் மொழி தந்த கவிதைகளும்
நீ..பருகிடும்போதா..
என்னை குயில் என அழைத்து
இந்த குயிலில்
முத்தங்களை
வருடிச்சென்றாய்.
உன் முத்தப்புயலின்
வேகத்தில்
அவஸ்தைப்படும் நான்.
தித்திக்கும் முத்தங்கள்
நித்தம் நித்தம்
உன்னிடம் இருந்து
கிடைக்குமானால்
என் வாழ்வையே..
உன்னிடம் அர்ப்பணித்து
கொள்வேன்.