உன்னை நம்பி
உனக்காக வாழ்ந்து
உனக்கே எனை அர்ப்பணித்து
உன்னையே.. நம்பி இருந்து
உனக்காக போராடி
இதயத்திலும் உடலிலும்
காயங்களை சுமந்து
உனக்கெனவே.. சுவாசித்துக்கொண்டு
இருந்த என்னை தவிக்க விட்டு
நீ.. துயில் கொள்கின்றாயே..
உலகில் நீ..
சுவாசிப்பது
ரசிப்பது
வாழ்வது
காத்திருப்பது
பேசுவது
எல்லாம் எனக்கென
இருந்தேன்
இப்பத்தான் புரிந்தது
நீ.. எனக்கென இல்லை என்று
இவள் பைத்தியக்காரி
உன்னில் பைத்தியமாய்
இருந்த பைத்தியக்காரி
உனக்காக வருந்திய
பைத்தியக்காரி
பல தடவை ஏமாற்றம்
என்று தெரிந்தும்
நான் உன் மீது கொண்ட
பாசத்தவிப்பில்
உன்னை சுமந்து கொண்டேனே
இவள் பைத்தியக்காரிதான்.
ஆனால்
நீ.. ஏமாற்றும்
ஒவ்வொரு நாளும்
கூடிக்கொண்டு செல்வதால்
இனியும்
வேண்டாம்.நீ.. தரும் ஏமாற்றமும்
உன் பொய் கொண்ட அன்பும்
இனியும் ஒரு பொய்க்குள்
வாழ்வதை விட
இந்த பொய் கொண்ட காவியக்காதலுக்கு
இன்றே விடை கொடுத்து
மொளனக் கடலில்
மூழ்கிப் போகின்றேன் நான்
இது வே..
நான் எழுதும் என்
இறுதிக் கவிதை உனக்கு
உனக்காக இக்கவி
பேனாவில் உள்ள மை எழுதவில்லை
என் கண்களில் இருந்து அருவியாய் கொட்டுகின்ற
கண்ணீர் எழுதுகின்றது
இதை படிக்காவிட்டாலும்
பத்திரப் படுத்திவை
என் மரணத்தின் பின்
என்னை உணரவைக்கும் உனக்கு.
ராகினி.
Tuesday, October 17, 2006
Monday, October 16, 2006
இவள் உன் ஜீவன்...
உனக்காகவே ஒரு ஜீவன்
தன் நிலை குலைந்து வாடி
நிக்கின்றாள் என்பதை
மறந்துவிட்டாயா..?
உன் அன்பை மட்டும் தானே
பருகிட தவிக்கின்றேன்
என் உருகிய நிலை கண்டும்
உன் மனம் கசியவில்லையே..
எந்த நிலையில் நீ..தடுமாறினாலும்
உன் காதலி உன்னை தானே..
நினைத்து தவிக்கின்றாள்
உனக்காக எதையும் இழக்க
தயாரான போதும்
நீ.. இதை புரிந்து
கொள்ள வில்லையே
என்றும்
உன் நலம் புகழ் வேண்டி
உனக்காகவே..
இந்த தீபத்தை சுமக்கின்றேன்.
இறைவனிடம் கையேந்தி..
ராகினி
ஜெர்மனி்
Sunday, October 15, 2006
Monday, September 18, 2006
இவள் புன்னகை உன் கையில்...
Friday, September 15, 2006
நமக்காக...வாழ்வோம்...
நீயும் நானும் பேசியபோது.
இருமனதுக்கும் தெரியாமல்
புகுந்து கொண்டது காதல்..
நீ....காதலித்தாயா..
இல்லை... நான் காதலித்தேனா...
தெரியாத பாதையில்
புரியாத புதிர் உள்ளபோது..
விடைகாண தனிமையில்
தள்ளாடுவது ஏன்...?
உன்னோடும் என்னோடும்
பல நினைவுகள் நதிபோல் ஓட....
வித விதமாய் மனதில்
எதுவும் தோன்றாதபோது..
எனக்காக நீ....யும்
உனக்காக நானும் வாழ்வதை
விட..நமக்காக இனி...
இருவரும் வாழ்வோம்.
---
அன்போடு
ராகினி
ஜெர்மன்
Thursday, June 08, 2006
நீ..பிரிந்தால்.......
உன் சுவாசக்காற்றில்
பதிவான என் பெயரை....
அழிக்காமல் உன் நெஞ்சில்
என்னை.....
கவிதையாக்கிக்கொள்கின்றாயே...
நான்...
எத்தனை வார்த்தைகள்
சொல்லத்துடித்தாலும்
உன்னைக் கண்டதும்
அத்தனையும் மறந்து
உன்னை ரசிக்கின்றேன்.
நீ... பிரிந்து செல்லுகையில்
உன்னைக் கவிதையிலும்
இசையிலும் காண்கின்றேன்.
முழுமையாக.. நீ...பிரிந்தால்
என் கண்ணீரில்
காண்போன் உன்னை.
ராகினி.
Friday, May 19, 2006
காதல் சுவாசம்
வார்த்தைகள் தேடி நான்
தவிக்கும் போது
உன் காதல் எனக்கு
கிடைத்து விட
என் கவிதைகள்
உயிர் பெற்றன.
கருமுகில் வானத்தை
மறைத்து இருளாக்கும் போது....
எங்கிருந்தோ..உன் குரல்
எனை அழைத்திட
இருளுக்குள் மிளிரும்
நட்ச்சத்திரம்போல்...
உன் குரல் என் செவிதனில்
இசையுடன் பாய்ந்திட
அந்த இரவை அழைக்கின்றேன்
இசையுடன் உன்னில் கரைந்துவிட.
உன் உயிர் துடிப்பை நான்
உணர்ந்து என் காதலை
உன்னிடம் தந்ததில்
ஒரு காவியத்தை காண்கின்றேன்
உன் கவிதனில்.
உதடுகள் கவி சிந்த
விழிகள் காத்திருக்க
இதயம் மலர்ந்திட
நம் காதல் பரவசம்
அடைகின்றது.
நம்காதல் இணைந்த
நேரம்
உலகில் ஓரு காவியம்
உதயமானது.
இருஉயிரும் ஒன்றாய்
கலந்தது.
நான் என் நிலை இழந்து..
போனாலும் எனக்கு தேவை
உன்குரல் தான்...
நான்
சிரிக்க மறந்த பொழுதுகள்
எல்லாம் என் புன்னகையை
மீட்டித்தந்து கொண்டு
இருக்கின்றாய்.
உனக்கு நன்றி சொல்லி
நான் பிரிவதை.
விடஉன்னை காதலித்துக்..
கொண்டே இறந்து..
விடுவேன்.
என் அன்பே..
உன் காதல் சுவாசம்
இருந்தால் என் புன்னகை
பூத்துக்..கொண்டே இருக்கும்
காவியத்தில்
ராகினி
Subscribe to:
Posts (Atom)