Wednesday, August 06, 2008

உன் மனதை கேள்




உன் மனதை கேள்
----------
எத்தனை சோதனைகள்
என் காதல் மீது
மனதை கேட்டுப்பார்
உன் உயிர் சொல்லும்
நான் உன் மீது கொண்ட
நம்பிக்கையை.
காதல் என்பது நெருப்பா..?
இல்லை குளிரா..?
இல்லை மாயையா?
தடம் புறண்டு தேடினாலும்
உண்மை என்பதே இல்லையா?
காதலில்.
தேன் பொழிந்த வார்த்தைகள்
கொஞ்சிய மொழிகள்
செதுக்கி எடுத்த
கவி வரிகள்
கரம் தொட்ட இசைகள்
எல்லாம்மாயையா?


உனது கொழுசு
உனது சுடிதார்
உனது மெட்டி
உனது சேலை
எல்லாம் மறைத்து
வைத்தும்
மறக்க மறுக்கின்றது
மனது.
ஏன் நீ..மட்டும் என்னை
புரியமறுக்கின்றாய்.!!!
உனக்காக என் அத்தனை
சுகங்களையும்
விட்டுக்கொடுத்தேன்.
நீ..தந்த உரிமைகளை
உன் என்னம் நிறைவேறியதும்
திருப்பி எடுத்துவிட்டாய்!
துடிக்கின்றேன் புழுவாய்
என் ஆழ் மனதுக்குள்
உன் காதலைஎழுதிவிட்டேன்
என் காதலின் வரிகளால்.

மௌனமாய் இருக்க
மனதும் இடம்
கொடுக்கவில்லை
விடை பெற பாதையும்
தெரியவில்லை.
என்னை சித்திரவதைப்-
படுத்துவதை விட
உன் கையால் என்னை
கொண்று விடு.

rahini
மழையும் நீயே..வெய்யிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே அடடா...

3 comments:

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

rahini said...

நடப்பவையாவும் வெற்றியில் முடியட்டும்

vignathkumar said...

feminest writers should be awer of eve teasing dialougs in tamil cinema and tv serials which is oppose to women democrasy and equality rights.
tamil feminest should be awer of male domination psychartists in tamil magazeens.whose opnions ,views are oppose to women equality rights,democrasy and self confidence {dr shalinee ,deddy are those types}