Tuesday, March 27, 2007

நீ.. என்னோடு



விதி தந்த
வேதைனைகள்.
மனம் முழுதும்
தழும்புகள் கோலம்
போடுகின்றன.
காதல் என்ற பனி
மழை நனைந்து
தடுமாறி..
இரு மனம் படும்
வேதனைகள் தான்
விதியின் விளையாட்டு.
காதலியே.. காதலியே.. என்றுநீ.. என்னோடு.. உலாவரும்
வரைதான்.
உன் வீட்டு தோட்டத்தில்
இவள் உன் வாழ்க்கை
சிறப்பித்துக்கொண்டு
இருக்கும்.
வாசனை கொண்ட
மல்லிகை.
நீ.. என்னை விட்டுப்
பிரிந்தால்.
அன்றே..இவள் வாழ்வு
முடவடையும் இறுதி நாள்.
மனம் அழுது கொண்டே..
இருக்கின்றது.
உன்னைக்காணும்
நாளை எண்ணி
மனம் சிதறிக்கொண்டு
இருக்கின்றது.
உன் உணர்வை புரிந்து.
கொண்டுதான்..
காதல் கொண்டோன்.
அனாலும் சிந்தனைகள்
கூடி சிதறுகின்றது
மனது வழி தெரியாமல்.
அன்பே..
என்னை சித்திரவதைப்...படுத்துவது.
உன் காதல் பாசம் நேசம் அல்ல
நீ.. வாழும் தூரத்தை எண்ணி

rahini



3 comments:

Suresh said...

"அனாலும் சிந்தனைகள்

கூடி சிதறுகின்றது

மனது வழி தெரியாமல்."

அருமையான வரிகள்...

வாழ்த்துகள்

சுஜா செல்லப்பன் said...

நல்ல கவிதை....பாராட்டுக்கள்..

rahini said...

en manam niraintha nanarika suresh
and sudarvili