
உனக்காகவே ஒரு ஜீவன்
தன் நிலை குலைந்து வாடி
நிக்கின்றாள் என்பதை
மறந்துவிட்டாயா..?
உன் அன்பை மட்டும் தானே
பருகிட தவிக்கின்றேன்
என் உருகிய நிலை கண்டும்
உன் மனம் கசியவில்லையே..
எந்த நிலையில் நீ..தடுமாறினாலும்
உன் காதலி உன்னை தானே..
நினைத்து தவிக்கின்றாள்
உனக்காக எதையும் இழக்க
தயாரான போதும்
நீ.. இதை புரிந்து
கொள்ள வில்லையே
என்றும்
உன் நலம் புகழ் வேண்டி
உனக்காகவே..
இந்த தீபத்தை சுமக்கின்றேன்.
இறைவனிடம் கையேந்தி..
ராகினி
ஜெர்மனி்
1 comment:
ஆஹா! அருமையான கவிதை!
Post a Comment