
உனக்காக வாழ்ந்து
உனக்கே எனை அர்ப்பணித்து
உன்னையே.. நம்பி இருந்து
உனக்காக போராடி
இதயத்திலும் உடலிலும்
காயங்களை சுமந்து
உனக்கெனவே.. சுவாசித்துக்கொண்டு
இருந்த என்னை தவிக்க விட்டு
நீ.. துயில் கொள்கின்றாயே..
உலகில் நீ..
சுவாசிப்பது
ரசிப்பது
வாழ்வது
காத்திருப்பது
பேசுவது
எல்லாம் எனக்கென
இருந்தேன்
இப்பத்தான் புரிந்தது
நீ.. எனக்கென இல்லை என்று
இவள் பைத்தியக்காரி
உன்னில் பைத்தியமாய்
இருந்த பைத்தியக்காரி
உனக்காக வருந்திய
பைத்தியக்காரி
பல தடவை ஏமாற்றம்
என்று தெரிந்தும்
நான் உன் மீது கொண்ட
பாசத்தவிப்பில்
உன்னை சுமந்து கொண்டேனே
இவள் பைத்தியக்காரிதான்.
ஆனால்
நீ.. ஏமாற்றும்
ஒவ்வொரு நாளும்
கூடிக்கொண்டு செல்வதால்
இனியும்
வேண்டாம்.நீ.. தரும் ஏமாற்றமும்
உன் பொய் கொண்ட அன்பும்
இனியும் ஒரு பொய்க்குள்
வாழ்வதை விட
இந்த பொய் கொண்ட காவியக்காதலுக்கு
இன்றே விடை கொடுத்து
மொளனக் கடலில்
மூழ்கிப் போகின்றேன் நான்
இது வே..
நான் எழுதும் என்
இறுதிக் கவிதை உனக்கு
உனக்காக இக்கவி
பேனாவில் உள்ள மை எழுதவில்லை
என் கண்களில் இருந்து அருவியாய் கொட்டுகின்ற
கண்ணீர் எழுதுகின்றது
இதை படிக்காவிட்டாலும்
பத்திரப் படுத்திவை
என் மரணத்தின் பின்
என்னை உணரவைக்கும் உனக்கு.
ராகினி.